மூதூரில் மீட்கப்பட்ட கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைக்க பொலிஸார் காத்திருப்பு
திருகோணமலை - மூதூர்,மேம்காமம் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைக்க பொலிஸார் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள பற்றை காட்டுப்பகுதிக்குள் இன்று (15) இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தின் போது தாக்குதல் நடாத்துவதற்காக விடுதலைப்புலிகள் இந்த கிளைமோரை மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன்போது மீட்கப்பட்ட கிளைமோர் ஒவ்வொன்றும் 5 கிலோ எடை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட கிளைமோரை செயலிழக்கச் செய்வதற்காக மூதூர் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் ,அனுமதி கிடைத்தவுடன் அதனை வெடிக்க வைக்க உள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam