பொலிஸாரால் தேடப்படும் இரண்டு சந்தேகநபர்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை பிரிவு பொதுமக்களிடம் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தென் மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களின் புகைப்படங்கள்
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெறப்பட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவிக்காக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை பிரிவு 071 - 8592867 அல்லது 074 - 1357642என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 20 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
