இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அழையுங்கள்! - பிரித்தானிய மக்களிடம் அவசர கோரிக்கை
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த 7 வயது சிறுவன் “நீங்கள் எனது தந்தையே கிடையாது, என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்று கதறியதை அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் கூர்மையாக அவதானித்துள்ளார்.
இதையடுத்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி பொலிஸாருக்கு அந்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் தகவல் அளித்துள்ளார்.
மேலும் கிழக்கு ஐரோப்பிய சாயலில் சிறுவனை கடத்திய அந்த மர்ம நபர் இருந்ததாகவும், அவர் குப்பை சேகரிப்பு பைகள் இரண்டை வைத்திருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் முதல்கட்டமாக சிறுவனை கடத்தி சென்ற அந்த நபர் 30 வயதை கடந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஞ்சள் நிறத்தில் பஃபர் கோட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்ததும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடத்தி செல்லப்பட்ட சிறுவனும், அந்த மர்ம நபரும் இறுதியாக ஏஞ்சல் மெடோ பகுதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இதன்படி, எங்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் காட்சிகள் அல்லது தகவல்கள் இருந்தால், தயவுசெய்து 101 (மேற்கோள் பதிவு: 001501-14112021) ஐ அழைக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam