இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T 56 ரக துப்பாக்கி ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் அதிரடி
படையினர் திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
