யாழில் கூரிய ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இடங்களை சுற்றிவளைக்கும் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள்
தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்
இதனிடையே, யாழ். மாவட்டத்தில் கூலிக்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.
அவ்வாறு கூலிக்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் செயற்பாட்டை தாம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam