யாழில் புதைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக நேற்று பொலிஸார் தெரிவித்து குறித்த பகுதியை முற்றுகையிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்று(11) வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இதில் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.
இது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றிருக்காலம் என சந்தேகிக்கப்படுவதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் ஆண் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது என சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகத்தின் பேரில் குறித்த இடத்தினை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்க்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சடலமானது இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச்சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் எனவும், சந்தேக நபரை கைது
செய்வதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
