அநுரவின் சொந்த ஊர் பொலிஸ் நிலையம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாாயக்கவின் பிறந்த இடமான தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒரு வருட காலமாக பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் இல்லாமல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தம்புத்தேகம நகரத்தில் நடக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதோடு பொலிஸ் நிலையத்தின் நிர்வாக செயற்பாடுகளும் மந்த கதியிலேயே நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்பதிகாரிகளை மாற்றுவதற்கான அதிகாரம்
2024ஆம் ஆண்டு தம்புத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகயீனம் காரணமாக விடுமுறையில் சென்று மீண்டும் சேவைக்கு சமுகமளிக்காததால் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரினால் பதில் பொறுப்பதிகாரிகளாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் புத்திக்க சிறிவர்த்தன, கட்டாயம் பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் சேவை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
இரு கிழமைகளில் குறித்த பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



