அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விபத்தில் பலி
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காரில் பயணித்த அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதியான்சலாகே குணதிலக்க பண்டார யகம்பத் வயது (48) என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும், காரும் மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற காரும் கந்தளாயில் இருந்து கபரனைக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



