கோப்பாயில் இன்று அதிகாலை பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு!
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் மூவர் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலிலும் அவரது பங்கேற்புடனும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பங்களிப்புடன் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 22, 23 மற்றும் 25 வயதுடைய மூவர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏனைய 6 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
