யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் யாழ். வரவேற்பு வளைவு அமைந்துள்ள செம்மணி சந்திப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளும் சோதனையிடும் நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படிருந்தது.
இந்த சோதனை நடவடிக்கையானது நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நேற்று(19.01.2024) மாலை 6.00 மணி தொடக்கம் இரவு10.00 மணிவரை இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அனும்பமால் தலைமையிலான போக்குவரத்து பொலிஸாரால் பேருந்துகளில் பயணிப்போரின் உடைமைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு பேருந்துகளும் முழுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையின் போது மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |