கொள்கலன் மோதியதால் ஏற்பட்ட விபத்து - சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு
மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த பகுதியில் கொள்கலன் ஒன்று இன்று காலை தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது. இதனால் கொழும்பு - கண்டி பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள்
இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரத்திலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்ஓவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு - கண்டி பாதையில் பிரவேசிக்கலாம்.
மீரிகம அதிவேக வீதியில் இருந்து புறப்பட்டு கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹந்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்கலன் பாரவூர்தி
வில்வத்த தொடருந்து கடவையில் இன்று காலை பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது கொள்கலனின் சாரதி வாகனத்தை விட்டுச் சென்றுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வீதி தடையால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
