வேகமாக சென்ற லொறியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - நான்கு பேர் கைது
லொறியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஹுங்கம பொலிஸார், அதில் பயணித்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் லொறியொன்றில் மாடுகள் எடுத்துச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் பிரகாரம், ஹுங்கம, கட்டைக்காடு பிரதேசத்தில் திடீர் சோதனைச் சாவடியொன்றை திறந்து வாகனங்களைப் பரிசோதித்துள்ளனர்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதன்போது, பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி அதிவேகத்தில் அவ்விடத்தைத் தாண்டிச் செல்ல முற்பட்ட லொறியொன்றை விரட்டிச் சென்ற பொலிஸார், வண்டியை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கைகளை சாரதி அசட்டை செய்து அதிவேகமாக லொறியைத் தொடர்ந்தும் ஓட்டிச் செல்ல முற்பட்டுள்ளார்.

அதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி வண்டியை மடக்கி நிறுத்தியுள்ளனர். அத்துடன் வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நான்குபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.