யாழில் அதிகளவு ஒலி எழுப்பிய ஆலயத்தின் ஒலி பெருக்கிகளை கைப்பற்றிய பொலிஸார்
யாழில் ஆலயமொன்றில் சட்டத்திற்கு விரோதமான முறையில் அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் ஒலி அமைப்பு மேற்கொள்ளபட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் முறையிட்டனர்.
மேலதிக நடவடிக்கை
தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சட்டத்திற்கு விரோதமான முறையில் அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை கைப்பற்றினர்.
மேலும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அதிகளவு ஒலி எழுப்பபடும் பொழுது சட்ட நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தில் எடுக்கப்படும் என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam