சந்தேக நபர் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தென்னிலங்கையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று பெண் மற்றும் ஆண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.
இந்த கொலை சம்பவம் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியி்ல உள்ள உரவத்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.
பொலிஸாரின் கோரிக்கை
வெல்லகே சமத் ஹர்ஷக பெத்தும் என்ற சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 071- 8591484 / 091 – 2291095 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
