இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
கூரிய ஆயுதத்தால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2025.04.18 திகதி, மதுகம பொலிஸ் பிரிவின் டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தலைமறைவு
இந்த குற்றம் தொடர்பான உண்மைகள் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர் பற்றிய விவரங்கள்
பெயர் - பிரம்மனகே டான் சனத் ரவீந்திர நிலந்த
முகவரி - எண்.78/01, இஹலகந்த, அகலவத்தை
அடையாள அட்டை எண்.:- 840321401V
சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றது.
தொலைபேசி எண்கள் - தலைமையக பொலிஸ் ஆய்வாளர் - மதுகம 071 - 8591701
சிஐடி - மதுகம 071-8594381
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam