கொழும்பில் கோடிக்கணக்கான ரூபா மோசடியில் ஈடுபட்ட நபர் - மக்களிடம் பொலிஸார் கோரிக்கை
கொழும்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
49 வயதான ரபீக் முகமது ஃபாரிஸ் என்ற நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2020.08.25 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 16,500,000 ரூபா பெறுமதியான ஜீப் ஒன்று திருடப்பட்டுள்ளது.
வாகன மோசடி
திருடிய வாகனத்தை மீள வழங்குவதாக உறுதியளித்து, 2023.12.18 அன்று 12,500,000 ரூபா மோசடி செய்ததாக சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பல போலி பெயர்களில் சுற்றித் திரிவாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல மொழிகளைக் கையாளத் தெரிந்த ரபீக் முகமது, அவர் ஓட்டும் வாகனங்களில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னங்களை காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான ரபீக் முகமது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
