தனியார் ஊடக நிறுவனமொன்றிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சரிபார்க்கப்படாத மற்றும் தவறான செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் குறித்து TRCக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தவறான செய்திகள்
அதன்படி, ஒளிபரப்பு உரிமங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட உரிய அமைப்பாக TRC இருப்பதால், எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்த கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் தனியார் ஊடக வலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்படாத மற்றும் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக குறித்த தனியார் ஊடக வலையமைப்பு மீது அதிகாரிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிவருகின்றனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri