அவுஸ்திரேலியாவில் சூறா மீன் தாக்கி ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவில் சூறா மீன் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 1963ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு சூறா தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீந்திக் கொண்டிருந்த நபர் ஒருவரை சூறா மீன் கொடூரமாக தாக்கியுள்ளதாகவும் இதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சூறா தாக்கிய போது அதனை நேரில் பார்த்தவர்கள் திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடலுக்கு செல்லும் போது மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri