கொழும்பில் வீடொன்றுக்குள் ஆயுதம் தாங்கிய குழுவென தகவல் - சுற்றிவளைத்த பொலிஸார்
கொழும்பு, ராஜகிரிய கல்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதம் தாங்கிய குழுவொன்று தங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று நேற்று இரவு குறித்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியது.
எனினும் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த எந்தவொரு தடயமும் அங்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்
வீடொன்றின் உரிமையை அடிப்படையாக வைத்து இந்த தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் முன்னாள் மேயர் ஜனக ரணவக்க தமது வீட்டை பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் குறித்த வீடு தனக்கு சொந்தமானது என முன்னாள் மேயர் ஜனக ரணவக்கவும் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
