விஜயின் கரூர் பிரசாரம்! பேருந்து ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு
த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விஜய் பிரசாரம்
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.
இதனிடையே கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விபத்து நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஜய் பிரசார பேருந்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான காணொளி இணையத்தில் பரவியுள்ளது.
அந்த காணொளியில் விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் காணொளி எடுக்கின்றனர்.
அப்போது பக்கத்தில் இருந்த பைக் மோதி கட்டுப்பாட்டை இழந்து பிரசார பேருந்தின் சக்கரத்தில் மோதுகின்றது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பைக்கில் சென்றவர்கள் சிறிது காயத்தோடு உயிர் பிழைத்தனர்.
வழக்குப்பதிவு
இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பேருந்து ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுவது என்ற பிரிவில் வேலாயுதம்பாளையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 7 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
