ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவிய பொலிஸார்! அம்பலப்படுத்திய தேசபந்து

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Deshabandu Tennakoon
By Dharu May 29, 2025 11:39 PM GMT
Report

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு ஆதரவளிக்கும“ நோக்கில் தென்மாகாணத்தின் பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் இருந்து நிதி பெற்றுள்ளனர் என தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்றில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் சிறப்பு விசாரணை குழு முன்னிலையிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

திடீரென மட்டக்களப்பில் மீண்டும் சுற்றிவளைக்கப்பட்ட பிள்ளையான் குழு

திடீரென மட்டக்களப்பில் மீண்டும் சுற்றிவளைக்கப்பட்ட பிள்ளையான் குழு

இரகசிய விசாரணை

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

திலிப பீரிஸ் எழுப்பிய கேள்வி

2023.12.31 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 08 உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு ஒன்று இரகசியமான முறையில் தென்மாகாணத்துக்கு சென்றுள்ளது.

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவிய பொலிஸார்! அம்பலப்படுத்திய தேசபந்து | Police Receive Money From Harak Gatta

இந்த குழுவினர் அங்கு செல்வதை தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கோ அல்லது மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ முன்கூட்டியதாக அறிவிக்கப்பட்டிந்தா?

தேசபந்து தென்னகோனின் பதில்

'தென்மாகாணத்தில் நான் சுமார் 3 ஆண்டுகாலமாக பொலிஸ் அத்தியட்சகராக பதவி வகித்துள்ளேன். மாத்தறையின் நிலவரத்தை நன்கு அறிவேன். நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வர்த்தகத்தின் பூர்வீகமாகவே மாத்தறை மாவட்டம் உள்ளது.

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவிய பொலிஸார்! அம்பலப்படுத்திய தேசபந்து | Police Receive Money From Harak Gatta

தென்மாகாணத்தில் பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் ஹரக்கட்டாவுக்கு எதிராக செயற்படவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் இரவில் கொலை செய்யப்படுவோம் என்ற அச்சநிலை காணப்பட்டது.

ஒருசிலர் ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத வியாபாரங்கள் ஊடாக பணம் பெறுபவர்கள்.

ஆகவே இவர்கள் ஹரக் கட்டாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 2023.12.29 ஆம் திகதியன்று மேல்மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவின் விசாரணையின் முன்னேற்றத்தன்மை குறித்து வினவினேன்.

அப்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தடுப்புக்காவலில் உள்ள ஹரக்கட்டாவுடன் தொலைபேசியில் உரையாடல் மற்றும் தொலைபேசி வலைப்பின்னலுடன் தொடர்புக் கொண்டிருந்த 149 பேரின் விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பித்தனர்.

கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஹரக்கட்டாவின் மீது அச்சம்

இந்த 149 பேரை உடனடியாக கைது செய்யுமாறும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினேன்.

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வியாபாரத்திற்கு உதவிய பொலிஸார்! அம்பலப்படுத்திய தேசபந்து | Police Receive Money From Harak Gatta

இருப்பினும் மாத்தறை பகுதிக்கு இந்த குழு தான் செல்ல வேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை.

2023.12.31 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 08 உத்தியோகத்தர்கள் மாத்தறை வெலிகம பகுதிக்கு சென்றதை தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கோ அல்லது மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ அறிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் தென்மாகாணத்தின் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹரக்கட்டாவின் மீது அச்சத்தில் இருந்தார்கள், ஒருசிலர் அவரிடமிருந்து பணம் பெற்றிருந்தார்கள்' என கூறியுள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US