போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை
கொழும்புத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருள் கொள்கலன் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்தில் 800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 472 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.
6 உயர் அதிகாரிகள் இடமாற்றம்
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு நேற்று (CID) வருகை தந்து, வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான ரன்மல் கொடித்துவக்கு மற்றும் அசோக தர்மசேன உட்பட 6 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அனுமதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.