சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு
யூடியூப்பரும் ஆளுங்கட்சியின் ஆதரவாளருமான சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
யூடியூப்பர் சுதத்த திலகசிறிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சார்ஜண்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காரணத்தினால் குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு
இந்நிலையில், தற்போது அவருக்கு அச்சுறுத்தலான சூழல் இல்லை என்று புலனாய்வு அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இன்றையதினம் தொடக்கம் சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



