நாட்டில் கட்டாயமாகும் நடைமுறை! கடுமையான சட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவுறுத்தல்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை அமைப்பவர்கள், தத்தமது பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வழிகாட்டல்
பொது மக்களுக்காக காட்சிப்படுத்தப்படும் அல்லது நடத்தப்படும் நிகழ்வுகளின் போது, வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது போன்ற அத்தியாவசிய வழிகாட்டல்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் தானசாலைகளை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, அதனை முறைப்படுத்துமாறு கோருகிறோம். இந்த பொசன் காலத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேரடியாக தலையிட்டு, தானசாலைகளை நெறிப்படுத்தப்பட்ட முறையில் ஒழுங்கமைக்க வேண்டும்.
வீதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் மறைக்கும் மற்றும் தங்களுக்குள் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.