மின்னேரியா சம்பவம்! - இராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவு
கடந்த வாரம் மின்னேரியா தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் பிற சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கெகிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
கடந்த வாரம் தேசிய பூங்காவிற்குள் நுழைந்த இரண்டு இராணுவ வாகனங்களை நிறுத்த முயன்றதாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகள் குழு தாக்கப்பட்டது.
சம்பவம் நடந்தபோது யானை குட்டியை திருடும் முயற்சியில் பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குழு குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் பின்னர் ஹபரன பொலிஸில் முறைபாடு செய்துள்ளனர். மேஜர் ஜெனரல் ஒருவர் மற்றும் அவரது இராணுவ துருப்புக்களுடன் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், வனவிலங்கு அதிகாரி தன்னை அவமதித்ததாக மேஜர் ஜெனரல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.......
ஹபரன விவகாரம்! - இராணுவக் குழு விசாரணை

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
