ஹபரன விவகாரம்! - இராணுவக் குழு விசாரணை
ஹபரனவில் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கும், வனவிலங்கு துறை அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் வாக்குவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இராணுவ விசாரணை குழு இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) பதிவாகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு விசாரணை குழு நியமிக்கப்பட்டதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை ஹபரனவில் வனவிலங்கு துறை அதிகாரிகள் குழுவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து சரிபார்க்கும் பொருட்டு இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான விசாரணை குழுவை நியமிக்க பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா உத்தரவிட்டார்.
விசாரணை குழு மேலதிக விவரங்களையும் ஆதாரங்களையும் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் அறிக்கைகளை இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.