கடனுக்கு மதுபானம் கேட்ட பொலிஸ் அதிகாரி-வழங்க மறுத்த மதுக்கடை உரிமையாளருக்கு கத்தி குத்து
கொஹூவலை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியின் தேவைக்கு எனக்கூறி மதுபான விற்பனை நிலையத்திற்கு சென்று கடனுக்கு மதுபான போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள சென்ற ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகி மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஹூவளை 120 பேருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
ஏன் பொலிஸாருக்கு கடனுக்கு மதுபானத்தை வழங்க முடியாது

கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்ததை அடுத்து திரும்பிச் சென்ற அந்த நபர், கொஹூவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியுடன் மீண்டும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை கத்தியால் குத்தியதாக மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகில் வந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸாருக்கு ஏன் கடனுக்கு மதுபானத்தை வழங்க முடியாது என கேட்டுக்கொண்டிருந்த போது, அவருடன் வந்த நபர் தனக்கு பின்னால் இருந்து கத்தியால் குத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், பொலிஸ் அதிகாரியும் அவருடன் வந்தவரும் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரை,அதன் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளர்.
மதுபான விற்பனை நிலையத்தில் உள்ள சீ.சீ.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படும் இந்த கத்தி குத்து சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan