ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் அதிகாரி.. முன்னெக்கப்படும் விசாரணை
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், பணப்பை, ஒரு தொகை பணம், கைத்தொலைபேசி, என்பனவும் சந்தேக நபர் வசம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கை பொலிஸில் இருந்து விலகும் போது பொலிஸ் சார்ஜன்ட் ஆக செயற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு

