பெருமளவு பணத்தை மோசடி செய்த பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்
பொலன்னறுவை பொலிஸாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி 2021ம் ஆண்டு பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த போது அங்கு பொலிஸாருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்துள்ளநிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
பிணையில் விடுதலை
இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலன்னறுவை விசேட குற்றப் புலன்விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரை கடந்த 18ஆம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியில் இருந்து பொலிஸ் திணைக்களம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
