வீதியில் ஊனமுற்ற நாயைக் கண்ட பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சிச் செயல் - குவியும் பாராட்டுக்கள்
வீதியைக் கடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஊனமுற்ற நாய்க்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவிச் செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பணியில் இருந்த குறித்த பொலிஸ் அதிகாரிகளின் செயல், மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வீதியை கடக்க உதவிய பொலிஸ் அதிகாரி
ஒரு பயணியால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்சியில், தலைக்கவசம் அணிந்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி, சந்திப்புக்கு அருகில் காத்திருந்த நாயை அணுகுவது காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய சமூக ஊடகப் பதிவின்படி, அந்த நாய் அதன் ஊனம் காரணமாக வீதியைக் கடக்க முடியாமல் இருந்தது.
உடனடியாகச் செயல்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, அந்த நாயைத் தூக்கிச் சாலையின் மறுபுறத்தில் பாதுகாப்பாக வைப்பது அந்தக் காணொளியில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு உதவியற்ற விலங்கிற்காகத் தனது அதிகாரப்பூர்வ கடமைகளையும் தாண்டிச் சென்ற இந்த மனமார்ந்த செயல் பலராலும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.