செம்மணி புதைகுழி தீர்வு கிடைக்காத அரச வன்முறையின் வெளிப்பாடு..! கனேடிய தமிழர்கள் குற்றச்சாட்டு
செம்மணி மனிதப் புதைகுழி என்பது இனப்படுகொலையின் ஓர் அடையாளமாகவும், தீர்வு கிடைக்காத அரச வன்முறையாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த இடத்தை, கனேடியர்களுக்கு தொலைதூர நாட்டின் வரைபடத்தில் இருக்கும் ஓர் இடமாகக் கருத முடியாது என அரசியல் மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர் டாக்டர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற “செம்மணிப் புதைகுழிகளிலிருந்து பொறுப்புக்கூறல் வரை” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்செயலான எச்சங்கள் அல்ல..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணியில் கிடைக்கப்பெற்ற மனித உடல்கள், கூட்டுப் புதைகுழிகள் ஆகியவை போரின் தற்செயலான எச்சங்கள் அல்ல. அவை அப்போதைய அரசாங்கத்தின் நோக்கத்தின் வெளிப்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.

இதற்கமைய, மனிதர்களை அழிப்பதற்கும், உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியை அவை பிரதிபலிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்தால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து, மேலும் ஒருமுறை அழுத்தம் கொடுப்பதற்கும், கவனத்தை ஈர்ப்பதற்கும் இன்று நாம் கூடியுள்ளோம் என்றார்.
கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை! சுற்றுலாப் பயணங்களை தவிருங்கள்: அனர்த்த முகாமைத்துவ மையம் வேண்டுகோள்
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு