காலி பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு அதிகாரி கைது
காலி பொலிஸ் நிலைய காசாளர், வெகுமதி பணத்திலிருந்து 727,150 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவில் காசாளராகப் பணியாற்றிய ஒருவரே இந்த குற்றத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சக அதிகாரிகளுக்கு வெகுமதிப் பணமாக செலுத்த வேண்டிய குறித்த பணத்தை அவர் கையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி மோசடி
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், பொலிஸ் நிலைய வெகுமதி நிதியிலிருந்து 727,150 ரூபா காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நிலையத்தின் கணக்காளர் குறித்த தொகைக்கான காசோலையை எழுதி சந்தேக நபரான காசாளரிடம் கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் பணமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், வெகுமதி பெற்றதாகக் கூறப்படும் அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டு தமக்கு வராததைக் கவனித்த கணக்காளர் விசாரித்தபோதே பணம் காசாளரால் மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




