குற்றச் செயல்களுக்கு துணை சென்ற பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான தண்டணை
சூதாட்ட வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டேன் என உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உறுதியளித்து 5000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
இதேவேளை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியை திருப்பி தர லஞ்சம் கேட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு குற்றங்களுக்காகவும் அவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் அதிகாரி அஹங்கல்ல பிரதேசத்தில் கடமையாற்றிய போதே
இந்த லஞ்சம் கோரல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
