கிளிநொச்சியில் கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்
கிளிநொச்சியில் கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(01.02.2024) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

இதன்போது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam