பொலிஸ் அதிகாரியின் கையை கடித்து பார்த்த நபர் கைது
மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்து காயப்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கேகாலை - ரண்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கேகாலை - ஹெட்டிமுல்ல 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கையை கடித்து காயப்படுத்திய நபர்
கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பொலிஸ் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கடித்து காயப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri