தேர்தல் கடமையிலிருந்த போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரி: உயர் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள்
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, திடீர் சுகவீனம் காரணமாக உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கராஜா சுபாஸின் உடலிற்கு யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் உயர் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளது.
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றையதினம் (15.11.2024) தேர்தல் கடமைகளின் நிமித்தம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் தங்கராஜா சுபாஸ் பணிக்கு அமர்த்தபட்டிருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த நிலையில் மலசலகூடத்தில் இருந்து அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளில் இருதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மரியாதை
கடந்த 2012ஆம் ஆண்டு களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரி, முல்லைத்தீவு, கோப்பாய், யாழ்ப்பாணம், நெடுந்தீவு போன்ற இடங்களில் கடமையாற்றிய உத்தியோகத்தர் பூரண பூமி பதக்கம், பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது வருட நிறைவு பதக்கம், 75 ஆவது வருட சுதந்திர தின பதக்கங்களை பெற்றிருந்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அராலி மத்தியில் அமைந்துள்ள உத்தியோகத்தரின் இல்லத்தில் பொலிஸ் மரியாதையுடன் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
