அழைப்பாணையை கையளிக்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட கதி
வழக்கொன்றுக்கு முன்னிலையாகுமாறு நீதிமன்ற அறிவித்தல் ஒன்றைக் கையளிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14.07.2023) கண்டி மாபானவத்துர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணையைக் கையளிப்பதற்காகக் கண்டி மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றுக்குச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு
குறித்த வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதாகக் கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் நாடு முழுவதற்குமான சமாதான நீதவானாக செயற்பட்டு வருவதாகவும், அவரது இரண்டு மகன்கள் தற்போது அப்பகுதியை விட்டு ஓடி ஒளிந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |