தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மதுபான விருந்து
நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் மதுபான விருந்து ஒன்றில் கலந்து கொண்டதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவருடன் வந்த ஒருவரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நுரைச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸ் அதிகாரியை மீட்டுள்ளனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மது அருந்தியிருந்ததை அறிந்த வைத்தியர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்த பொலிஸ் உத்தியோகத்தர், இரவு வேளையில் யாருக்கும் தெரிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று காலை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது தனிப்பட்ட ஆடைகளுடன் சென்றுள்ளார்.
இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் விருந்திற்குச் செல்லும் வேளையில் தான் ஓய்வெடுக்கப் போவதாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் ஆனால் அது தொடர்பில் எந்த குறிப்பும் இல்லையெனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.