இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!
களுத்துறை- பயாகலையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(9)இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயாகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த பொலிஸ் அதிகாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
பின்னர் இந்த பொலிஸ் அதிகாரி குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை முதலில் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் மீதி 180,000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
