குளிரூட்டியை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
270,000 ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த, பொறுப்பதிகாரி, காணாமல் போன வாகனம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதில் ஈடுபட்ட நிலையில், முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்து வாகனத்தையும் மீட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
எனினும், குறித்த வாகனத்தை மீட்பதற்காக 270,000 ரூபாயை இலஞ்சமாக அவர் கோரியதாக முறையிடப்பட்டிருந்தது. இந்தப் பணத்தொகையை தனியார் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யுமாறும் அவர் குறித்த வாகன உரிமையாளரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
கண்டறியப்பட்ட உண்மை
இதன்படி, தாம், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, குளிரூட்டியை கொள்வனவு செய்த, வர்த்தக நிலையம் ஒன்றின், மேலாளரின் கணக்கில் அந்த தொகையை தாம் வைப்பு செய்ததாக வாகன உரிமையாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளின் போது உண்மை என்ற கண்டறியப்பட்ட நிலையில், பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |