கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்

Sri Lankan Tamils Jaffna Canada Crime
By Sajithra Apr 23, 2026 08:09 AM GMT
Report

கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களித்தவர் கைது

தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களித்தவர் கைது

சிகிச்சை அளிக்க தாமதம்.. 

இதன்போது, விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர்.

கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய் | Police Negligence Eelam Tamil Dies In Brampton

அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், குடிபோதையில் இருந்ததாகக் கூறி அவருக்கு அபராதத் துண்டினை (Ticket) வழங்கிவிட்டு, பின்னர் நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் (மதுபோதை எனக்கூறியதால்) அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். வைத்தியப் பரிசோதனையில் அவரது உடலில் மது அறவே இல்லை என்பதும், மூளை இரத்தக் கசிவே மயக்கத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரணில் - சுரேஷ் சலே கூட்டணியின் அட்டூழியங்கள் : வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்

ரணில் - சுரேஷ் சலே கூட்டணியின் அட்டூழியங்கள் : வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்

உடலை பெறுவதில் சிரமம்.. 

மரணத்தின் தறுவாயிலும் பிறருக்கு உதவும் நோக்கில் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர் இணங்கியிருந்தார். இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய் | Police Negligence Eelam Tamil Dies In Brampton

இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பே கனடியப் பிரஜாவுரிமை பெற்றதால், அவரிடம் கடவுச்சீட்டு (Passport) இருக்கவில்லை.

இதனால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரை கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுண் மற்றும் பீல் பிராந்திய பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பா ஆகியோர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தும், ஒரு தமிழ் இளைஞருக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு காரணமான பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உடலை தாயகம் அனுப்ப தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் எனவும் அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 1 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 1 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US