யாழில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் விசேட நடவடிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை கண்காணிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் பொலிஸாரையும் உள்ளடக்கிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்ப்பாண குடா நாட்டின் முக்கிய வீதிகளில் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியில் பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இதேவேளை,யாழ்ப்பாணத்தில் விமானப் படையின் உதவியுடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam