பிரதி பொலிஸ் மா அதிபராக நிஹால் தல்துவ நியமனம்
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியை வகித்துக் கொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 08ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதம்
பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி நிஹால் தல்துவ, பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான கடிதம் ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கியுள்ளார். அதே நேரம் நிஹால் தல்துவ தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
