பொலிஸ் - காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள்! இடித்துரைத்த தேரர்
வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப்படக் கூடாது என வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கில் சிறு பிரச்சினை இருப்பதாக உணரமுடிகின்றது. அங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.
சுயாதீன நாடு
13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை வழங்கவும். இலங்கை என்பது சுயாதீன நாடு. நாம் இந்தியாவின் கைப்பாவையாகவும் மாறக்கூடாது.
வெளிநாட்டுத் தொடர்புகள் அவசியம். அதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியதாக மாற்ற வேண்டும். வெளிநாட்டுத் தூதரக சேவைகளில் உள்ளவர்கள் மாற்றப்பட வேண்டும். சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்களை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
