யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பலி (video)
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.
இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam