போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி (Photos)
கல்முனை தரவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார்சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய சொகுசு வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதி கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார், சொகுசு வாகனம் ஒன்றை நிறுத்த முற்பட்டபோது போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார்சைக்கிளில் மோதிவிட்டு தப்பிச் சென்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாகனத்தை விட்டுவிட்டு அதன் சாரதி தப்பி ஓடிய நிலையில் குறித்த வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தை பொலிஸார் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் வாகனத்தை செலுத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri