சிவில் உடையில் பொலிஸ் ஊடகவியலாளர் : சாணக்கியன் கடும் எச்சரிக்கை (Video)
மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம்(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில்
இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ்
மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸ் ஊடகவியலாளர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்டு சிவில் உடையில் ஒருவர் அவ்விடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமலாக்கப்பட் ஊடகவியலாளர்களுக்காக நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் போது இவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையினால் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்புக்கு ஒரு நீதி, கொழும்பிற்கு ஒரு நீதி எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.



