கண்ணாடித் துண்டொன்றினால் கழுத்தறுத்து இளைஞர் ஒருவர் கொலை! குற்றப் பார்வை (Video)
கண்ணாடித் துண்டொன்றினால் கழுத்தறுத்து இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொழும்பின் புற நகர் பகுதியான கடவத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
கடவத்தை அன்றூஸ் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீடொன்றின் வாடகைக்கு தங்குமிடமாக வழங்கப்படும் அறையொன்றில் இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில் கடவத்தை - கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுசங்க எனும் 20 வயதான இளைஞன் படு காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலை தொடர்பில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்ணாடித் துண்டுடன் 19 வயதான இளைஞன் ஒருவரை கடவத்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமி ஒருவருடன் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும், சந்தேக நபருக்கும் இருந்த காதல் தொடர்பே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந் நிலையில், இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை விசேட தொகுப்பு இதோ,
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri