கட்சி தலைவரை கொல்ல சதி: பொலிஸ் விசாரணை ஆரம்பம்
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா, தன்னைப் படுகொலை செய்வதற்கு பிரபலமான பிக்கு ஒருவர் பாதாள உலகக்குழுவொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
அத்துடன் தான் வசிக்கும் இந்துருவ - கோணகல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு தன்னை படுகொலை செய்ய ஒத்தாசை வழங்கினால் ஐந்து லட்சம் ரூபா தருவதாக குறித்த பிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதன் பேரில் குறித்த பெண்ணும் இன்னொரு இளைஞரும் சேர்ந்து தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் முறைப்பாட்டுக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றையும், புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் கையளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
