நாட்டில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருளுடன் மூவர் கைது!
வெவ்வேறு இடங்களில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஜ்மிர் மாவத்தையில், 21 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவொல்மடுவத்த பிரதேசத்தில் 7 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் இதம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் 6 கிராம்
190 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri